கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்
திமுக விழுப்புரம் மாவட்டப் பொருளாளரும் முன்னாள் நகர மன்ற தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது நன்மதிப்பு கொண்ட இரா.ஜனகராஜின் தந்தை டி.ராஜாமணி கடந்த ஆக.28 அன்று காலமானார். அவரது இல்லத்திற்கு சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (செப்.5)சென்று தந்தையை இழந்து வாடும் ஜனகராஜை சந்தித்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
