சுதந்திரதின பேச்சுப்போட்டி, பரிசளிப்பு
வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஆக,15) சுதந்திர தினம் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் த.வேலு எம்எல்ஏ, பேரா.கல்பனா, கீதா முரளி எம்.சி., திமுக பகுதிச் செயலாளர் எஸ்.முரளி, அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.தளவாய்சாமி, திமுக வர்த்தகரணி அமைப்பாளர் ஆர்.பாலு, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் எஸ்.வெங்கடேசன், எஸ்.குமார், செயலாளர் எஸ்.குமார், பொருளாளர் சி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.