மதுரவாயல் பகுதியில் அரசு கலைக்கல்லூரி வாலிபர் சங்க பகுதி மாநாடு கோரிக்கை
சென்னை, ஜூலை 27- மதுரவாயல் பகுதியில் அரசு கலைக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்த உள்ளது. சங்கத்தின் மதுரவாயல் பகுதி 10வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 27) காரம்பாக்கத்தில் நடை பெற்றது. மாநாட்டில், 146 வட்டத்தில் தெருக்களுக்கு சரியான பெயர் பலகை வைக்க வேண்டும், மதுர வாயல் பகுதி முழுவதும் குடிநீர் குழாய் மற்றும் கழிவு நீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு காமேஷ் தலைமை தாங்கி னார். ஜமுனா சங்க கொடியை ஏற்றினார். சேஷ்மா வர வேற்றார். தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமாறன் துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை இமயவர்மன் சமர்ப்பித் தார். மாவட்டச் செய லாளர் தீ.சந்துரு சிறப்புரை யாற்றினார். பொருளாளர் எஸ்.திவாகர் நிறைவுரை யாற்றினார். காயத்ரி நன்றி கூறினார். 11 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவ ராக இமயவர்மன், செய லாளராக காமேஷ், பொரு ளாளராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.