இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாட்டுக்கு நிதி வழங்கல்
கிருஷ்ணகிரி, ஆக.1- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது தமிழ் மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதி களில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு நிதி தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் என்.பத்ரியிடம் கெலமங்கலம் ஒன்றியக் குழு சார்பில் ரூ. 25 ஆயிரம், தளி ஒன்றிய குழு சார்பில் 1 லட்சத்து 40 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் முதல் தவணையாக வழங்கினர். இதில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாநாட்டு வரவேற்பு குழு நிர்வாகிகள் பி. நாகராஜ் ரெட்டி, ஆர்.சேகர், சி.பி. ஜெயராமன், மார்க்சிஸ்ட் கட்சி தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், கெலமங்கலம் ஒன்றியச் செய லாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் அனுமப்பா, இளம் தலைவர் புருஷோத்தம ரெட்டி, மூத்த தோழர் டி. எஸ்.பாண்டியன், திவாகர், பட்டாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.