வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

பிப். முதல் வாரத்தில் கீழடி 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கம்

சென்னை, ஜன.22-
கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். 
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 6 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கான ஒப்புதலை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்நிலையில், கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். 
மேலும், தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

;