விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப்.28- நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நீண்ட நாட்களாக ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தால் நிறைவேற்றப்படாத குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அமைத்திட வேண்டும், தெருவிளக்குகள் அமைத்திட வேண்டும். மயா னப் பாதையை சீரமைக்க வேண்டும், தெருநாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மு.து.செல்வராஜ், எஸ்.கே.சிவச்சந்திரன் ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெருமாள், ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முடிவில், ஊராட்சி வாரியாகப் பொதுமக்கள் சார்பாக, கோரிக்கை கள் அடங்கிய மனுக்கள்ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் நேரில் வழங்கினர்.
