பள்ளி காலாண்டு விடுமுறை நீட்டிப்பு
சென்னை,செப்.25- பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறி விப்பு வெளியிடப்பட்டது. 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை என்றும் வருகிற 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடித்து அக்டோபர் 7 (திங்கட்கிழமை)திறக்கப்படும் என அறிவிக்கப்படு கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 குற்றவியல் சட்டங்கள் : ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை,செப்.25- ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு, புதுவை வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.பழைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்க்ஷிய அதினியம் ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
திரைப்பட இயக்குநர் மோகன்ஜி மீது மேலும் ஒரு புகார்
சென்னை,செப்.25- பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்தை பரப்பிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, சென்னை யில் கைது செய்து செய்யப்பட்டார். இதற்கிடையில் திருச்சி சமயபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், பழனி கோயில் பஞ்சாமிர்த பிரிவு கண்காணிப்பாளர் பாண்டியராஜ் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மோகன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.