tamilnadu

டிரம்புக்கு போட்டியாக எலான் மஸ்க் புதுக்கட்சி தொடக்கம்

டிரம்புக்கு போட்டியாக எலான் மஸ்க் புதுக்கட்சி தொடக்கம்

நியூயார்க், ஜூலை 06- அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா வால் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த வருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. “ஒன் பிக் அன்ட் பியூட்டிபுல் பில்” என்ற செலவு மசோதாவை டிரம்ப் கொண்டுவர முயன்ற போது, “இந்த மசோதாவால் நாட்டின் கடன் அதிகரிக்கும்” என  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், “மசோதா வை ஆதரிப்பது தவறு” என குடியரசுக் கட்சி உறுப்பினர்களை யும் கேட்டுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பும் மஸ்க்கும் ஒருவரை யொருவர் குற்றம்சாட்டி, பொதுவெளியிலேயே மோதிக் கொண்டனர். அதுமட்டுமின்றி, “செலவு மசோதா அமல்படுத்தப் பட்டால், நான் புதிய கட்சி தொடங்குவேன்” என அறிவித்து, 80% நடுத்தர மக்களை பிரதி நிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று தனக்கு சொந்த மான டுவிட்டர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார். இந்தக் கருத்துக் கணிப்புக்கு 80% (56.30 லட்சம் பேர்) ‘ஆம்’  என்று பதிலளித்தனர். இதனை யெடுத்து எலான் மஸ்க்,”தி அமெரிக்கா கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கு கிறேன். அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுக்கவே, இன்று  ‘அமெரிக்கா கட்சி’ உருவாக்கப் பட்டுள்ளது” என டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.