இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
சென்னை, ஜூலை 17- திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் வியாழக்கிழமை (ஜூலை 17) காலமானார். அவருக்கு வயது 67. 1980இல் வெளிவந்த ‘இவர்கள் வித்தியாசமான வர்கள்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான வேலுபிரபாகரன், 1989ல் ‘நாளைய மனிதன்’ படம் மூலம் இயக்குநராக கால் பதித்தார். அந்த படம் வெற்றிபெற்ற தால், அதன் இரண்டாவது பாகமாக 1990ல் ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கினார். பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த ‘அசுரன்’, ‘ராஜாகிளி’ படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் தோல்வியடைந்தன. அருண் பாண்டியனை வைத்து ‘கடவுள்’, நெப்போலியன் நடித்த ‘சிவன்’, சத்யராஜின் ‘புரட்சி க்காரன்’ போன்ற படங்களை இயக்கிய அவர் தோல்வி யையே சந்தித்தார். அடுத்த கட்டமாக நடிப்பில் கவனம் செலுத்திய வேலு பிரபாகரன், ‘பதினாறு’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’, ‘கடாவர்’, ‘பீட்சா 3’, ‘ரெய்டு’, ‘வெப்பன்’, ‘கஜானா’ போன்ற படங்களில் நடித்தார். 2009ல் ‘காதல் கதை’ என்ற படம் மூலம் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பிய அவர், 2017ல் ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படத்தையும் எடுத்தார். பி.ஜெயாதேவி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். 2017ல் தன் 60வது வயதில் தன்னைவிட 25 வயது குறைவான நடிகை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.அவர், வேலு பிரபாகரனுடன் ‘காதல் கதை’ என்ற திரைப்படத் தில் நடித்திருந்தார். இது அப்போது பேசுபொருளாக இருந்தது. கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித் துள்ளனர்.