தருமபுரி மாவட்டம் உதயமான தினம் அதியமான், ஔவை சிலைக்கு மரியாதை
தருமபுரி, அக்.2- தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு, வள்ளல் அதியமான், புலவர் ஔவையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றுபட்ட சேலம் ஜில்லாவிலிருந்து நிர்வாக வசதிக் காக 1965 ஆம் ஆண்டு அக்.2 ஆம் தேதி தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இதையொட்டி போக்கு வரத்து காவல்துறை சார்பில், தருமபுரி நான்கு ரோட்டிலுள்ள வள்ளல் அதியமான் மற்றும் புலவர் ஔவையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. போக்குவ ரத்து காவல் துணை ஆய்வாளர் கோமதி, சிறப்பு துணை ஆய்வாளர் ரகுநாதன், சமூக ஆர்வலர் சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் அதியமான், ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்கியதன் நினைவாக, பொதுமக்களுக்கு நெல்லிக்கனி வழங்கப்பட்டது.
