100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்கக் கோரிக்கை
காஞ்சிபுரம், ஜூலை 24- நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்கி குறைந்தபட்சம் நான்தோறும் 4மணி நேர வேலையை உறுதிபடுத்த வேண்டும். என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் வாலாஜாபாத் ஒன்றிய 3ஆவது மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் வாலாஜாபாத் ஒன்றிய 3ஆவது மாநாடு, கே.எஸ்.பி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் தலைவர் ஆர்.பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் எம்.டில்லிபாபு வேலையாறிக்கையை சமர்பித்தார். ஒன்றிய பொருளாளர் செல்வமணி வரவு-செலவு அறிக்கையை சமர்பித்தார் சங்கத்தின் மாநில இணைத் தலைவர் கே.பி.பாபு துவக்கவு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.முனுசாமி, நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் பி.பி.பாலாஜி, மாவட்டப் பொருளாளர் வி.அரிகிருஷ்ணன் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். தீர்மானங்கள் மாற்றுத்திறனாளி களுக்கு நிபந்தனையற்ற வங்கி அனைத்து கடன்க ளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த UDID ஸ்மார்ட் கார்டு க்கு பதிவு செய்த அனைவருக்கும் காலம் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற வர்களுக்கு, அவர்க ளுக்குரிய மனையை அளவீடு செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்ப டைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மகளிர் உரிமை தொகைக்கு அலைகழி க்காமல் வழங்க வேண்டும். கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தலை மையிலான மாற்றுத் திற னாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் இம்மாநாட்டில் சங்கத்தின் ஒன்றிய தலை வராக வி.அரிகிருஷ்ணன், செயலாளராக எம்.டில்லி பாபு, பொருளாளராக செல்வமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.