விவசாயிகள் போராட்டம் எதிரொலி ஆழ்துளை கிணறு அமைப்பு
கிருஷ்ணகிரி,ஜூலை 25 - சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி அருகில் ஓபேபாளையம் கிராமத்தின் பின்புறத்தில் பாறைகளை ஒட்டி மலைவாழ் மக்கள் சுமார் 15 குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திலும், மலைவாழ் மக்கள் சங்கத்திலும், உறுதி யாக நின்று அடிப்படை வசதி களுக்காக 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் வாயிலாக வீடுகளுக்கு பட்டாக்களும் மின்சார வசதியும் பாதை வசதியும் கிடைக்கப் பெற்றுள்ளனர். குடிநீருக்கு சிரமம் இருந்து வந்த நிலையில் விவசாயிகள் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக மக்கள் கோரிக்கையை ஏற்று வெள்ளியன்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவ லகம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.சங்க மாவட்ட துணை மாவட்ட தலைவர் முருகேசன் உடன் இருந்தார். இங்குள்ள மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் குண்டப்பா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன்,மக்கள் நலனுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து உதவி புரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் ஆகியோருக்கு இங்கு குடி யிருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.