அண்ணாமலைப் பல்கலைக்கழக தினக்கூலி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
சிதம்பரம், ஜூலை 3- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் என்.எம்.ஆர் பணிகளில் 237 பேர் கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு ஒரு நாளைக்கு ரூபாய் 40 என்ற சொற்ப கூலிக்கு நிய மிக்கப்பட்டனர். தற்போது, நாள் ஒன்றுக்கு ரூபாய் 440 கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் நிலவும் நிதி சிக்கலைக் காரணம் காட்டி இவர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை பல்கலைக் கழக நிர்வாகம் மேற் கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் அண்ணா மலை பல்கலைக்கழக தினக் கூலி மற்றும் என்.எம்.ஆர் ஊழியர்களின் ஆலோ சனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு ராஜா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றும் போது, அண்ணாமலை பல்கலைக்கழக ஊழி யர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவும், பணி நிரந்தரம் செய்வதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதுணையாக இருக்கும்” என்றார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பணி நிரந்தரம் செய்வ தற்கான அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டி ருந்தாலும், பொதுமக்கள், தொழிலாளர்கள், ஊழி யர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக குரல் கொடுத்து போராடக்கூடிய கட்சி சிபிஎம் தான் என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் சிபிஎம் மூத்தத் தலைவர் மூசா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டத் தலைவர் இளமுருகன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சங்கமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தொழி லாளர்களின் பிரச்சனை குறித்து உரையாற்றினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, சதீஷ், சபரி உள்ளிட்ட பல்கலைக் கழக தினக்கூலி, என்.எம். ஆர் ஊழியர்கள் கூட்ட த்தில் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கை குறித்து கே.பாலகிருஷ்ண னிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.