tamilnadu

img

முதலை கடித்து மாணவர் பலி  சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

முதலை கடித்து மாணவர் பலி  சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

திருவண்ணாமலை, செப்.16-  சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதியில் முதலை கடித்து பலியான கல்லூரி மாணவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில், பெரிய மலை வேடியப்பன் கோவில் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் முனீஸ் (18) என்பவர் கடந்த 14ஆம் தேதி மாடுகளை காட்டில் ஓட்டிவிட்டு முகம் கழுவ ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முதலை கடித்து இழுத்துச் சென்று நேரில் மூழ்கடித்தது. இதில் முனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். ராமதாஸ், ஏ. லட்சுமணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் குபேரன், தண்டராம்பட்டு வட்ட நிர்வாகி அண்ணாமலை ஆகியோர் முனீஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.