சாலையை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை
சென்னை, ஆக. 14 சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மண்டலம் 4 நல அலுவலரிடம் மாமன்ற உறுப்பினர் பா.விமலா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஆர்.கே. நகர் வார்டு 40க்கு உட்பட்ட மாதா கோயில் மேட்டுத் தெருவில் கடந்த 15 வருடங்களாக சாலை அமைக்கவில்லை. சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வயதானவர்கள் அடிக்கடி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக அப்பகுதியில் தரமான சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.