தமிழகத்தில் இன்று 1430 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 11,073 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தில் இருந்து வந்த இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 1,430 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 7,79,046 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 66,063 பேருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனைகளும், மொத்தமாக 1,19,30,240 பேருக்கு இதுவரை சோதனை செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இன்று 1,453 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,56,297 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை 11,694 பேர் இறந்துள்ளனர்.