tamilnadu

img

சிறப்பு வகுப்புகள் குறித்து ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன்....

ஈரோடு:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளது. முதலமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும்” என்றார்.நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர் என்றும் இதை ஊக்கப்படுத்த தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை மூலமாக வெளியிடப்படும். பாடநூல் திட்டம் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வருகிறோம். அரசு பள்ளியில் உள்ள மீதமுள்ளபுத்தகங்களை திரும்ப அனுப்பி வருகின்றனர். அவற்றை கரூரில் உள்ள டி.என்.பி.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

;