கட்டுமான தொழிலாளர்களுக்கு 3ஆயிரம் பென்சன் வழங்கவேண்டும்
மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்
வேலூர், ஆக 31 - வேலூர் மாவட்ட கட்டுமான தொழி லாளர் சங்க 10வது மாநாடு வேலூரில் மாவட்டத் துணைத் தலைவர் டி.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை மாவட்டத் துணைத் தலைவர் டி.சம்பத், சிஐடியு கொடியை மாவட்ட குழு உறுப்பினர் ஆரிமுத்து ஏற்றி வைத்தனர். சி.கன்னியப்பன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க, எம்.ராஜா வரவேற்று பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் ஏ.பழனியப்பன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.பாண்டுரங்கன் வரவு செலவு அறிக்கை முன் வைத்தனர். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் சி.சரவணன், பீடி சங்க மாவட்ட இணை செயலாளர் எஸ்.சிலம்பரசன், தவிச மாவட்ட தலைவர் சி.எஸ்.மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே.தங்க மோகனன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநாட்டு நிறைவுரையாற்றினார். புதிய மாவட்டத் தலைவராக டி.சுப்பிர மணி செயலாளராக ஏ.பழனியப்பன் பொருளாளராக கே. பாண்டுரங்கன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கட்டுமான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்திட வேண்டும். எம்.சாண்ட் பி.சாண்ட் விலையை கட்டுப்படுத்த வேண்டும். நலவாரிய பணப் பயன்களை இரட்டிப்பாக்கிட வேண்டும். பென்ஷன் ரூ. 3000 வழங்கிட வேண்டும். மேலும் பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.