tamilnadu

img

பொங்கல் பண்டிகைக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குக கட்டுமான தொழிலாளர்கள்  கோரிக்கை

பொங்கல் பண்டிகைக்கு  ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குக கட்டுமான தொழிலாளர்கள்  கோரிக்கை

திருவண்ணாமலை, செப்.19 - பொங்கல் பண்டிகையின் போது, தரமான வேட்டி, சேலை பொங்கல் தொகுப்பு டன் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் திருவண்ணாமலை மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 7 ஆவது மாநாடு தமிழ் மின் நகரில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் காஞ்சனா கொடியேற்றினார். ஜெகநாதன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் விக்ரம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் அறிக்கையை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாக ராஜன், நிதி காப்பாளர் மு. பாலாஜி உரை யாற்றினர். சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, கே. சரவணன், எஸ். முரளி, சிபிஎம் மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், விதொச மாவட்டச் செயலாளர் கே. கே. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சசிகுமார் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக எஸ். விக்ரம், செயலாளராக ஆர். கமலக்கண்ணன், பொருளாளராக எஸ். காஞ்சனா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானம் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டால் அரசு அறிவித்தபடி ரூ. 8 லட்சம் வழங்க வேண்டும், மகப்பேறு நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதிலிருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சம், விபத்து நிதியாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.