tamilnadu

img

சாதி ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் - சிபிஎம் வரவேற்பு!

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணுபொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சாதி மறுப்பு திருமண தம்பதியர் படுகொலைகளுக்கு ஆளாவதும்அச்சுறுத்தல்கள் மத்தியில் திருமண வாழ்க்கையை நடத்துவதும்சாதி ஆதிக்க சக்திகளால் மிரட்டப்படுவதும்துரத்தப்படுவதும் தொடர்ந்து நடந்தேறி வரும் சூழலில் ஏற்கனவே இருக்கிற கிரிமினல் சட்டங்கள் இவற்றை தடுப்பதற்கு போதுமான வலிமையோடு இல்லை என்பதையும்சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

2012 இல் இந்திய சட்ட ஆணையமே இத்தகைய சிறப்பு சட்டம் வேண்டும் என்று பரிந்துரைத்ததும் நினைவு கூரத்தக்கது. தமிழ்நாட்டிலும் தேசத்தின் இதர பகுதிகளிலும் நிகழ்ந்து வரும் சாதி ஆணவக் கொலைகளும்அது தொடர்பான அனுபவங்களும்சாதி ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகளும்காவல்துறையின் அணுகுமுறைகளும் இத்தகைய சிறப்பு சட்டம் வேண்டும் என்ற தேவையை நிரூபிப்பதாகவே அமைந்துள்ளன.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சேலம் முதல் சென்னை வரை 400 கிலோமீட்டர் நடை பயணம்சென்னையில் சிறப்பு மாநாடுதமிழ்நாடு முழுமையும் கருத்தரங்கங்கள்ஆர்ப்பாட்டங்கள் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து இடையறாது இக்கோரிக்கையை முன்னெடுத்து வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழ்ந்த எல்லா சாதி ஆணவக் கொலைகளிலும் நீதிக்கான தலையீட்டை செய்துள்ளதோடுபாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டப் போராட்டத்தையும் நடத்தியும் வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவிடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தமிழ்நாடு முதல்வர் இடம் இதற்கான விரிவான கோரிக்கை மகஜரையும் அளித்தன. அக்டோபர் 162025 அன்று தமிழ்நாடு முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்  தலைமையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சந்தித்த போதும் இக்கோரிக்கையை வலியுறுத்தினோம்.

இப்பின்புலத்தில் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்குரியது. இந்த ஆணையம் விரைந்து செயல்பட்டுஉரிய பரிந்துரைகளை அளித்துவலுவான தனிச் சட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொள்கிறது.