ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு சிஐடியு திருவண்ணாமலை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
திருவண்ணாமலை, ஆக.23 - திருவண்ணாமலை நகரில் ஏழை-எளிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என சிஐடியு திரு வண்ணாமலை மாவட்ட மாநாடு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு திருவண்ணாமலை மாவட்ட 10-வது மாநாடு, செங்கத்தில் சனிக்கிழமை (ஆக. 23) நடைபெற்றது. மாவட்டத் தலை வர் கே. காங்கேயன் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில், மாவட்டத் துணைத் தலைவர் எம். வீரபத்திரன் செங்கொடி யேற்றினார். கே. நாகராஜன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் லட்சுமணன் வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் திருச்செல்வம் துவக்க உரையாற்றினார். செயலாளர் இரா. பாரி செயலாளர் அறிக்கையும், எஸ். முரளி நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் இ. முத்துக்குமார் நிறை உரை யாற்றினார். மாவட்டத் துணைச் செய லாளர் கே. கணபதி நன்றி கூறினார். சிஐடியு நிர்வாகிகள் ஆர்.சிவராஜ், அ.சேகர், பி .வெங்கடேசன், ஆர். கமலக் கண்ணன், கே.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு குழு இம் மாநாட்டில், 9 பேர் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கி ணைப்பாளராக கே. நாகராஜன், மாவட்ட நிதி காப்பாளராக மு. பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து நடைபெற்ற பிரதிநிதிகள் பேரணியை மாவட்ட துணைத் தலைவர் வே. சங்கர் துவக்கி வைத்தார். தீர்மானம் மாநாட்டில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வீட்டுமனை இல்லாத கட்டுமான தொழி லாளர்களுக்கு கட்டுமானத் தொழி லாளர் நல வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு களை உருவாக்க வேண்டும், திரு வண்ணாமலை நகரில் ஏழை, எளிய மக்களுக்கு அடுக்குமாடி (முதற்கட்டமாக ஆயிரம்) குடியிருப்புகளை உருவாக்க வேண்டும், ஆரணியில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும், திருவண்ணாமலை நகரில் சட்டவிரோதமாக இயங்கும் ரேப்பிடோ, டூவீலர் டாக்ஸி மற்றும் ஊபர், ஓலா, ரெட் தனியார் செயலிகள் மூலம் இயங்கும் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.