அச்சுதானந்தன் படத்திற்கு சிபிஐ தலைவர்கள் அஞ்சலி
கேரளாவில் காலமான சிபிஎம் முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் நா.பெரியசாமி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.