tamilnadu

img

கடலூரில் பிஎஸ்என்எல் வெள்ளி விழா

கடலூரில்  பிஎஸ்என்எல் வெள்ளி விழா

கடலூர், அக்.2- பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெரியார் சிலையில் இருந்து வெள்ளிவிழா பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் கடலூர் மாவட்ட பொது மேலாளர் எஸ்.பாலச்சந்திரன், டிஎஸ்பி ரூபன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. கடலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில் இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழா கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர்கள் முரளிதரன், ஜெயகிருஷ்ணன், உதவிப் பொது மேலாளர்கள் கீதா, மகேஷ் குமார், திருமுருகன், சுமா, வெங்கடேசன், ஜெயி லால், சுஜேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.