மாணவரின் உயர் கல்விக்கு உதவி
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீதா குமாரசாமி என்பவரின் மகன் அஸ்வந்த் என்பவர் மும்பை ஐஐடி கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலில் பங்கேற்க உதவித்தொகையாக ரூ.35 ஆயிரம் கேட்டு மனு அளித்த நிலையில், அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் தொழிற்சாலைகள் கலந்து கொண்ட சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வெள்ளியன்று (ஜூன்.21) நடைபெற்றது. தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு முகாமினை இணை இயக்குநர் அருணகிரி தொடங்கி வைத்தார் இம் முகாமில் பத்தாம் வகுப்பு ,+2, கலை அறிவியல் பட்டதாரிகள் தொழில் நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் ஆண் பெண் என 200க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் சுய விவர குறிப்புகளை அளித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி ஆணை மாலை வழங்கப்பட்டது.
திருநங்கைகளுக்கு நலத்திட்ட சிறப்பு முகாம்
காஞ்சிபுரம், ஜூன் 21 - காஞ்சிபுரத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு தேசிய மற்றும் மாநில அடையாள அட்டைகளை வழங்கினார்.
திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கு தல், ஆதார் அட்டையில் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை வழங்குதல், வாக்காளர் அட்டை திருத்தம் மற்றும் புதிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, திறன் பயிற்சி, இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை ஆகியவற்றினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாம் மூலம் திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருநங்கைகள் , திருநம்பி களுக்கு பெற்று பயனடைந்தனர். மேலும், இம்முகாமில் 7 - திருநங்கைகளுக்கு மாநில அடையாள அட்டை , 12 - திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டை, 12 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை ஆகியவை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, அரசு அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சு போட்டி!
சென்னை, ஜூன் 21- ஸ்ரீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி களை நடத்த இருக்கிறது.
நடைபெறும் இடங்கள்:
இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சென்னை யில், ஜூலை 20 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி லும், ஜூலை 27 அன்று கிழக்கு தாம்பரத்திலுள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறு கிறது. சென்னை தவிர, ஜூலை 21 வேலூரிலும், ஜூலை 28 புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 3 கோவையிலும், ஆகஸ்ட் 4 ஈரோட்டிலும், ஆகஸ்ட் 10 சேலத்திலும், ஆகஸ்ட் 11 திருச்சியிலும், ஆகஸ்ட் 17 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 18 திரு வாரூரிலும், ஆகஸ்ட் 24 நெல்லையிலும், ஆகஸ்ட் 25 மதுரையிலும் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சென்னை யில், ஜூலை 20 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி லும், ஜூலை 27 அன்று கிழக்கு தாம்பரத்திலுள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறு கிறது. சென்னை தவிர, ஜூலை 21 வேலூரிலும், ஜூலை 28 புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 3 கோவையிலும், ஆகஸ்ட் 4 ஈரோட்டிலும், ஆகஸ்ட் 10 சேலத்திலும், ஆகஸ்ட் 11 திருச்சியிலும், ஆகஸ்ட் 17 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 18 திரு வாரூரிலும், ஆகஸ்ட் 24 நெல்லையிலும், ஆகஸ்ட் 25 மதுரையிலும் நடைபெறவுள்ளது.
ஆட்சியர் வேண்டுகோள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவல கங்களிலும் ஜூன். 21 முதல் 27 வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று (ஜூன் 24) மக்கள் குறை தீர்வு நாள் முகாமில் கொடுக்கப்பட்ட வேண்டிய மனுக்களை பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவல கத்திற்கு சென்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் கொடுத்து பயன்பெறு மாறு, மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.