tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

முதியோர் இல்லங்களுக்கு விண்ணப்பங்கள்

காஞ்சிபுரம், செப்.15- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரி யத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த்தியடைந்தவா்க ளுக்கான முதியோர் இல்லங்கள் நடத்த விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார் இந்த இல்லங்களை நடத்து வதற்கும், பராமரிப்பதற்கும் தகுதிவாய்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ண ப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் பலி  

காஞ்சிபுரம், செப்.15- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஹரீஷ், காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள இரும்பு விற்பனையகத்தில் பணி புரிந்து வந்தார். வழக்கம்போல பணி முடித்து, தனது நண்பர்கள் நிர்மல் மற்றும் சந்தோஷ் உடன் காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வையாவூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனது புல்லட் வாகனத்தில் எதிரே வந்தபோது, இரண்டு வாக னங்களும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நிர்மல், சந்தோஷ், வெங்கடேசன் ஆகியோர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலை யில், நிர்மல் உயிரிழந்தார்.