tamilnadu

img

சேவை மனப்பான்மையை வளர்க்கும்  அவசிய வழிகாட்டி - எம்.ஜே.பிரபாகர்

சேவை மனப்பான்மையை வளர்க்கும்  அவசிய வழிகாட்டி!

சாரணர் இயக்கம் என்பது 6 வயது முதல் 25 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர், இளை ஞர்களை குணாம்சம், ஆரோக்கியம், கைவினைக் கலைகள், திறன்கள் மற்றும் சேவை மனப்பான்மை ஆகிய வற்றை வளர்த்தெடுப்பதன் மூலமாக நல்ல குடிமகனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.  இதை உருவாக்கியவர் ராபர்ட் பேடன் பவல் பிரபு ஆவார். 1907 ஆம்  ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கப் பட்டது. இந்தியாவில் பல தேசிய சாரணர் அமைப்புகள் 1951-க்கு பிறகு பாரத சாரணர் வழிகாட்டிகள் சங்கம் என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன.  திரிசாரணீயத்தின் நோக்கம்  இளைஞர்கள் சமூகத்தில் கட்டமைக் கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும், வெளியகச் செயற்பாடுகளில் உச்ச திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் வழி வகுப்பதே திரிசாரணீயத்தின் நோக்கமாகும். சேவையே இறுதி லட்சியமாக கொண்ட நல்ல குடிமகனை உருவாக்குவதே திரிசாரணீயத்தின் குறிக்கோளாகும்.  திரிசாரணீயம் என்றால் “இலக் கற்றுத் திரிவதல்ல”. ஒரு குறிப்பிட்ட லட்சி யத்தை மனதில் கொண்டு, வழியில் வரக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து கொண்டு மிகச் சரியான வழிகளில்  பாதையை அமைத்துக் கொள்வதாகும்.  சாரணனின் பண்புகள்  சாரணர் நம்பிக்கைக்குரியவர், விசுவாசமானவர், அனைவருக்கும் நண்பர், மரியாதை மிக்கவர், விலங்கு களின் நண்பர், இயற்கையை நேசிப்ப வர், ஒழுக்கமானவர், பொதுச்சொத்தை பாதுகாப்பவர், துணிவுமிக்கவர், சிக்கனமானவர், சிந்தனை-செயல்-சொல்லில் தூய்மையானவர்.  பல்வேறு சேவைகள்  மூத்தோர் கல்வி, ரத்த தானம், குடிமைச் சமூக பாதுகாப்பு, சமூக சேவகர், மலையேற்ற வீரர், பாலை வனப் பணி, மக்கள்தொகை கல்வி, லட்சிய பயணம், தூய்மைப்பணி ஆர்வ லர், மண்வள பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, உலக நட்பு - இதுபோன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடும் வகையில் தனது பயிற்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  எச்சரிக்கை  இந்த இயக்கம் மதம், அரசியல் சார்பற்ற பொது சேவையை நோக்க மாகக்கொண்ட இயக்கமாகும். ஆனால் இந்த இயக்கத்தை கைப்பற்றி மதசார்புடைய இயக்கமாக மாற்று வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விஷயம்.  குழந்தைகளை, மாணவ-மாணவிகளை நல்வழிப்படுத்தும் ஆர்வமும், பொதுச் சேவையில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அறிவியல் பிரச்சார அமைப்புக்கள் இணைந்து சாரண இயக்கத்தை வழிநடத்தி உண்மையான சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.  சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்ற கி.ரமேஷ், இந்நூலை தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. பள்ளி கல்லூரி பயிலும் அனைவரும் இந்த நூலினை வாசித்தறிய வேண்டும்.  திரிசாரணீயம்   மொழிபெயர்ப்பாளர்: எழுத்தாளர் கி.ரமேஷ்   வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை விலை: ₹100   தொடர்பு: 044 24332424