திருவண்ணாமலையில் அச்சுதானந்தனுக்கு அனைத்து கட்சிகள் இரங்கல்
திருவண்ணாமலை, ஜூலை 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும், கேரள முன்னாள் முதல் வருமான அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திருவண்ணா மலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அறிவொளி பூங்காவில் இருந்து அஞ்சலி ஊர்வலம், அண்ணா சிலை அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.சிவக் குமார், மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ், இரா. பாரி, வழக்கறிஞர் எஸ். அபிராமன், பன்னீர் செல்வம், குமரன், சிபிஐ நிர்வாகிகள் தங்க ராஜ், ஜோதி, மதிமுக நிர்வாகிகள் சீனி. கார்த்திகேயன், பாசறை பாபு, கிருஷ்ண மூர்த்தி, திமுக நகர செயலாளர் கார்த்தி வேல் மாறன், தலித் விடுதலை இயக்கம் தலித் நிதியா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரங்கல் கூட்டங்களில், செயற்குழு உறுப்பினர்கள் ந.சேகரன், ஏ.லட்சுமணன், வாசுகி மற்றும் மாவட்ட குழு, இடைக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். வந்தவாசி அஞ்சலகம் அருகில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகே சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில், திரளான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.