tamilnadu

img

கோரிக்கைகள் மீது நடவடிக்கை : போராட்டம் ஒத்திவைப்பு

கோரிக்கைகள் மீது நடவடிக்கை :  போராட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம், ஜூலை 25-
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், நடுக்குப்பம்,திருக்கனூர் வழியாக செல்லும் நீர்வடி கால் ஓடையை சரிசெய்து பக்கிங் கால்வாயுடன் இணையும் வரை உள்ள முட்புதர்களை வடகிழக்கு பருவமழை வருவதற்குள் சீர் செய்ய, நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க வேண்டும், கந்தாடு கிரா மத்தில் உள்ள பஞ்சாயத்து ஏரி பெஞ்சால் புயலில் உடைந்துபோன கரையை சரி செய்து, மதகு சீரமைக்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறை வேறும் வரை மரக்காணம் ஒன்றிய சிபிஎம் சார்பில்
காத்திருக்கும் போராட்டம் ஜூலை.25 அன்று நடத்துவது என அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து அதற்கான ஆயத்த பணிகளில் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் சம்மந்தப் பட்ட துறை அலுவலர்கள் ஜூலை.24 அன்று  மரக் காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சி யர் தலைமையில் மரக் காணம் காவல் ஆய்வாளர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகி யோர் சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட குழு வி.அர்ச்சுணன்,ஒன்றிய செயலாளர் ஆர்.உலக நாதன் ஆகியோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் நீர் வடிகால் ஓடையை பார்வையிட்டு பணிக்காக கூடுதல் ஆட்சியர் பார்வைக்கு அனுப்புவது என்றும், அதேபோன்று கந்தாடு ஏரி சீரமைப்பு உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு மாத காலத்தில் கோரிக்கை கள் மீது நடவடிக்கை எடுத்து சரிசெய்ய படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று   காத்திருக்கும் போரா ட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர். இதில் ஏ.மனோகர், ஜே.ராஜி, எம்.குமார், எஸ்.ராஜி, எம்.அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.