மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துக: முதல்வர்
7 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு
சென்னை,அக்.19- திருவாரூர், தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து ரையாடினார். ஞாயிறன்று (அக்.19) சென்னை எழில கத்தில் உள்ள மாநில அவசரகால செயல் பாட்டு மையத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு, ஆயத்த நிலை மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், கரை யோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்க ளுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர் வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்தி ருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், மழையினால் பாதிக்கப் பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் விவசாய ப்பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில், கொள்முதல் பணிகளை தொய் வின்றி நடத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகள் விரைவாக கிடங்குகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை துரித ப்படுத்திடவும் முதலமைச்சர் அறிவுறுத்தி னார். அதனைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னையில் மேற்கொண்டுவரும் முன்னேற்பாடு நட வடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அப்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மாவட்டங்களில் மேற்கொள் ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் சேத விவரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வின்போது வருவாய் நிர்வாக ஆணையர் எம். சாய்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, சென்னை மாநக ராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
