tamilnadu

img

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்

குடும்ப வன்முறைக்கு எதிரான  சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்

திருவண்ணாமலை, செப். 17- குடும்பவன்முறைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 8ஆவது மாநாடு வடமாதிமங்கலம் பகுதியில் நடைபெற்றது. லட்சுமி, சுகுணா, கௌரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆண்டாள் கொடியேற்றி வைத்தார். சித்ரா வரவேற்றார். எஸ். நபினா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் ஜி. ராணி துவக்க உரையாற்றினார். கலஸ்தம்பாடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மேலாளர் எம். நந்தினி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. வாசுகி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, எஸ்.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில துணைச் செயலாளர் எஸ். கீதா நிறைவுரையாற்றினார். தீர்மானங்கள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த விசாக கமிட்டியை அமைக்க வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் பாலின சமத்துவ பாடத்தை அமல்படுத்த வேண்டும், சுய உதவிக் குழு பெண்களுக்கு சுயதொழில் செய்யவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக எஸ். சுகுணா, நிதி பொறுப்பாளராக கௌரி மற்றும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.