tamilnadu

img

779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின....

சென்னை:
தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செம்பரம் பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை. தற்போதைக்கு ஏரி திறக்கப்படாது.செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றில் குறைந்தளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.பேரிடர் காலத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.