சென்னை துறைமுகத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியவரும், சென்னை போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) மூத்த உறுப்பினருமான கோவில்பிள்ளைக்கு வியாழன்று (ஆக.28) பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய துறைமுக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் டி. நரேந்திரன், சென்னை துறைமுகம் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் எஸ்.சங்கரலிங்கம், தீக்கதிர் சென்னைப்பதிப்பு பொதுமேலாளர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.