வாலிபர் சங்க திருப்பூர் மாநாடு, பேரணியுடன் துவக்கம்
திருப்பூர், ஜூலை 27- வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு, ஞாயிறன்று எழுச்சி பேரணியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருப்பூர் மாவட்ட 20 ஆவது மாநாட்டின் தொடக்கமாக, நூற்றுக் கணக்கான வாலிபர்கள் பங்கேற்ற எழுச்சி பேரணி ஞாயிறன்று நடை பெற்றது. திருப்பூர், முருங்கப்பாளை யம் ராம்ஸ் மருத்துவமனை அருகே இருந்து பேரணியை, சங்கத்தின் முன் னாள் தலைவர் எம்.ராஜகோபால் கொடியசைத்து தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி உள்ளிட்ட நிர்வாகி கள் தலைமையேற்று முன்னாள் அணிவகுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் வெண்கொடிக ளுடன், தாரை தப்பட்டை முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக முழக்கம் எழுப்பி பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முருங்கப்பாளை யம், குமார் நகர், வ.உ.சி. நகர் சாலை வழியாக ஊர்வலம் பொதுக்கூட்டத் திடலை அடைந்தது. வஉசி நகர் பழ னிச்சாமி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். திங்களன்று (இன்று) பிரதிநிதிகள் மாநாடு நடை பெறவுள்ளது.