tamilnadu

img

உண்டியல் நிதி மூலம், நூலகத்திற்கு வர்ணம் அடித்த வாலிபர் சங்கம்!

உண்டியல் நிதி மூலம், நூலகத்திற்கு வர்ணம் அடித்த வாலிபர் சங்கம்!

அவிநாசி, ஆக.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் உண்டியல் ஏந்தி நிதி திரட்டி, உடலுழைப்பு செலுத்தி, அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் செயல்பட்டு வரும் நூலகத் திற்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி  நகராட்சி, 9 ஆவது வார்டுக்குட்பட்ட  பாரதி வீதியில் நூலகம் அமைந் துள்ளது. 1954 ஆம் ஆண்டு அக்.16  ஆம் தேதி இந்த நூலகம் துவங் கப்பட்டு, 76 ஆயிரத்து 500 நூல் களுடன் செயல்பட்டு வருகிறது. 7  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக உள்ள னர். இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர் கள் அதிகளவில் வந்து செல் கின்றனர். இதனிடையே, இக்கட்ட டமானது அங்கங்கே சிதலமடைய  தொடங்கியவுடன், தன்னார்வலர் கள் முயற்சியினால் சீரமைக்கப் பட்டது. இருப்பினும் கட்டடத்திற்கு வர்ணம் தீட்டாமல் இருந்துள்ளது. இந்நிலையில், இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் அவிநாசி ஒன் றியக்குழு சார்பில், 10 ஆயிரம் சதுர அடி உள்ள நூலக கட்டடத்திற்கு வர்ணம் அடிக்கவும், உடல் உழைப்பு செலுத்தவும் முடிவு செய் தனர். அதன்படி, ஒரு வார காலமாக  வாலிபர் சங்கத்தினர் வணிக நிறு வனங்கள், சந்தை கடைகள் உள் ளிட்ட இடங்களில் உண்டியல் ஏந்தி  நிதி வசூலில் ஈடுபட தொடங்கினர். ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் ஞாயி றன்று காலை 7 மணி முதல் இரவு  7 மணி வரை வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில், நூலகப் பகுதியை சுத்தம் செய்து, வர்ணம் தீட்டும்  பணியில் ஈடுபட்டனர். ஒன்றியப் பொருளாளர் தங்கராஜ், துணைத் தலைவர்கள் நந்தகோபால், ரவீந்தி ரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், மாவட்ட நூலக அலுவலர் ராஜன்,  இரண்டாம் நிலை நூலகர் சர வணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் மாநில செயற்குழு உறுப்பி னர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த் திப் பேசினர். வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் பாலமுரளி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன், தமுஎகச ஒன்றியச் செய லாளர் தினகரன், வாலிபர் சங்க  முன்னாள் ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர். வாலிபர் சங்கத்தின் இந்த செயலுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ள னர்.