tamilnadu

img

வாலிபர் சங்க மாநாடுகள் – நிர்வாகிகள் தேர்வு

வாலிபர் சங்க மாநாடுகள் – நிர்வாகிகள் தேர்வு

சேலம், ஆக 25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநாடுகள் பரவலாக நடந்து வருகிறது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதன்படி, வாலிபர் சங்க சேலம் வடக்கு  மாநகரப் பேரவை கூட்டத்தை மாவட்டப் பொரு ளாளர் வெற்றிவேல் துவக்கி வைத்தார். வாலி பர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்  எம்.பிரவீன் குமார் உள்ளிட்டோர் வாழ்த்தி  பேசினர். இதில், செப்-11 பாரதியார் நினைவு நாளில் சேலம் புதிய பேருந்து நிலையம்  அருகே 200மீட்டர் தொலைவில் ஐந்து மதுக் கடை இருப்பதை அகற்ற வலியுறுத்தி கண் டன போராட்டம் சகோதர அமைப்புகளு டன் இணைந்து நடத்துவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது பேரவையின் நிறைவில், வடக்கு மாநக ரத்தின் தலைவராக ஆர்.புருஷாத்தமன், செயலாளர் டி.மனோகரன், பொருளாளர் எம். ஜீவா உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. வாலிபர் சங்க  மாநில பொருளாளர் எஸ்.பாரதி நிறைவுரை யாற்றினார். ஈரோடு வாலிபர் சங்கத்தின் ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா 16 ஆவது மாநாடு ஞாயி றன்று ஊராட்சி கோட்டை, ஜீவா நகர் சமு தாய கூடத்தில் நடைபெற்றது. கமிட்டி தலை வர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். பொரு ளாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட  துணைச் செயலாளர் பி.அன்பு ஜனாதிபதி துவக்கவுரைற்றினார். செயலாளர் பி. கோபால கண்ணன் அறிக்கை வாசித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.பி.பழனி சாமி வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயலா ளர் வி.ஏ.விஸ்வநாதன் நிறைவுரையாற்றி னார்.  மாநாட்டில், தலைவராக பி.பூபதி ராஜா, செயலாளராக பி.கோபால கண்ணன், பொரு ளாளராக பி.சூர்யா, துணைத் தலைவராக ஆர்.பாலசுப்பிரமணி, துணைச் செயலாள ராக சுகன்யா உள்ளிட்ட 11 பேர் கொண்ட கமிட்டியாக தேர்வு செய்யப்பட்டது.