வாலிபர் சங்க மாநகர மாநாடு
சேலம், ஜூலை 15- வாலிபர் சங்க சேலம் கிழக்கு மாநகர மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாந கர 11 ஆவது மாநாடு ஞாயிறன்று, கருங்கல்பட்டியில் எஸ். கோபிராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி பி.திவ்யா துவக்கவுரையாற்றினார். பாராமஹால் நாணவி யல் சங்க இயக்குநர் ஜி.சுல்தான், ராஜி ஜவுளி சங்க நிர்வாகி கே.பச்சமுத்து, மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அபிராமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகரத் தலைவராக எஸ்.பிரபாகர், செயலாளராக கே.விமல்குமார், பொருளாளராக ஆர்.கவீன்ராஜ், துணைத்தலைவர்களாக பி.தமிழரசன், எம்.தமிழ்ச்செல்வன், துணைச்செயலாளர்களாக கே.வீரமணி, பி.திவ்யா உட்பட 15 பேர் கொண்ட மாநகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் வி.பெரியசாமி நிறை வுரையாற்றினார்.