வாலிபர் சங்க ஆனைமலை மாநாடு
கோவை, ஜூலை 22- வாலிபர் சங்கத்தின் ஆனைமலை தாலுகா மாநாட்டில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட் டம், ஆனைமலை தாலுகா 8 ஆவது மாநாடு, வேட்டைக்கா ரன் புதூரில் ஞாயிறன்று நடைபெற்றது. தாலுகா தலைவர் லோகு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நிசார் அஹமத் துவக்கவுரையாற்றினார். முன்னாள் தாலுகா செயலாளர் பரமசிவம் வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், மலைவாழ் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் பேருந்து வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி, ஆனைமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ உருவாக்க வேண்டும். நவமலை பகுதியிலிருந்து அரசுப் பணிக்காக சென்றபோது உயிரிழந்த மலைவாழ் மக்க ளுக்கு, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக கபிலன், செயலா ளராக சுரேஷ், பொருளாளராக அப்துல் வாகிப் உட்பட 13 பேர் கொண்ட தாலுகாக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா நிறைவுரையாற்றி னார்.