வேலை நேர மாற்றம்: இந்திய மாணவர் சங்கம் மனு
சேலம், செப்.28- சேலம் அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) வேலை நேரத்தை மாற்றி அமைக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தி னர் மனு அளித்தனர். 2025-2026 கல்வியாண்டில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுழற்சி முறை வேலை நேரத்தால் சுமார் 5500 மாணவ/மாணவிகள் பாதிக்கப்படுவ தாக அவர்கள் கூறியுள்ளனர். புதிய நேர மாற்றத்தின்படி, காலை 9:00 முதல் பிற்பகல் 1:45 வரையும், பிற்பகல் 1:45 முதல் மாலை 6:20 வரை என்கிற சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் மாண வர்கள் பெருமளவில் துன்பத்தை சந்திப்பார்கள். சுழற்சி 1 மாணவர்கள் அதிகாலையில் வரவேண்டியதால், காலை உணவு உட்கொள்ளாத நிலை ஏற்படும். மேலும், பேருந்து வசதி குறைபாடு மற்றும் மதிய உணவை விடுதியில் பெறு வதில் சிக்கல் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். சுழற்சி 2 மாணவர்கள் நீண்ட நேரம் பயணிப்பதால் வீடுகளுக்கு திரும்பு வதில் தாமதம் ஏற்படுவதுடன், பகுதி நேர வேலைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், இடைவேளை நேரம் 10 நிமிட மாக குறைக்கப்பட்டதால் கழிவறை போன்ற வசதிகளைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. எனவே, பழைய வேலை நேரத்தையே தொடர வேண்டும் அல்லது மாணவர்களைப் பாதிக்காத வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், இடைவேளையை 15 நிமிட மாக உயர்த்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டார்வின், செயலாளர் பவித்திரன் உள்ளிட் டோர் கல்லூரி முதல்வரிடம் வலியுறுத்தினர்.
