tamilnadu

img

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கோவை, ஆக.27- வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் வீடு களை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டத்தை, அடர் வனப் பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை தனியார் எஸ்டேட் பகுதி களில் தற்போது அதிக அளவில் காட்டு யானைகள் தென் படுகின்றன. புதுகாடு, புது தோட்டம் ரொட்டிக்கடை, கவர் கல், சோலையார் அணை, சின்னக்கல்லார், பண்ணிமேடு, மூடீஸ் பகுதிகளில் கேரளம் வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. இந்த காட்டு  யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் மற்றும் வேட்டை  தடுப்பு காவலர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் கெஜ முடி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருந்து வரு கின்றனர். அப்பகுதிக்கு புதனன்று அதிகாலை வனப்பகுதி யிலிருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் அங்கு உள்ள கோவில் கதவுவை உடைத்தும் 15க்கும் மேற்பட்ட வீடு களை இடித்துத் தள்ளியது. இதனால் அச்சமடைந்த தொழி லாளர்கள் குடும்பங்கள் அருகில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். வனத்துறைக்கு தகவல் அளித் தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என வும் காட்டு யானை கூட்டத்தை அடர் வன பகுதிகள் விரட்ட  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.