மாணவர்கள் தங்கும் விடுதிகளில் திடீர் ஆய்வு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல்
கோவை, ஆக.24- கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் மேற்கொண்ட திடீர் ஆய்வில், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கும் விடுதிகளில் குற்றச்சம்பங்களில் ஈடு படும் நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செட்டிபாளையம் மற்றும் மதுக் கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள, மாணவர்கள் தங்கும் விடுதிகளில் ஞாயிறன்று அதி காலை 400 காவலர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஆயுதங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன், கல்லூரி மாணவர்கள் தங்கும் தனி யார் விடுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது 13 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும் நபர்கள் 55 பேர் பிடிபட்டுள்ளனர். 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 46 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது பிடிக்கப் பட்டவர்களில் நான்கு பேர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் சூடான் நாட்டை சேர்ந்த நபரும் உள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவ தாக, தெரிவித்தார்.