வீட்டுமனை கேட்டு விதொச-வினர் பதிவு தபால் அனுப்பும் இயக்கம்
ஈரோடு, ஜூலை 18- இலவச வீட்டுமனை கேட்டு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், லட்சுமி நகர் பகுதியில் ஆட்சியருக்கு பதிவு தபால் அனுப்பும் இயக்கம் வெள்ளியன்று நடைபெற்றது. ஈரோடு வட்டம், விருமாண்டம்பாளையம், எலவ மலை மற்றும் லட்சுமி நகர் ஏராளமானோர் சொந்த வீட்டு மனை இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டு மென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் பதிவு தபால் அனுப்பும் இயக்கம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.விஜயராகவன் தலை மையில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கூலி தொழிலாளர்கள் 190 பேர் மனுக்கள் அனுப்பினர். இவ்வியக்கத்தில் இளங்கோ, முருகன், நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.