tamilnadu

img

திருப்பூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாடை கட்டி ஒப்பாரிப் போராட்டம்

திருப்பூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாடை கட்டி ஒப்பாரிப் போராட்டம்

திருப்பூர், செப். 8 - திருப்பூரில் 22ஆவது நாளாக திங்களன்று காத்திருப்புப்  போராட்டம் நடத்திய அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம்  மற்றும் சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சேர்ந்து  தூங்கும் அரசை, பாடை கட்டி ஒப்பாரி வைத்து எழுப்பும் போராட்டத்தை நடத்தினர். திருப்பூர் மண்டல அலுவலகம் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் 1  கிளை முன்பு, பணியில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண் டித்து, தூங்கும் அரசை பாடை கட்டி ஒப்பாரி வைத்து எழுப்பும்  போராட்டத்தை நடத்தினர். இதில் பல்லடம் ஓய்வு பெற்ற ஊழி யர் பழனிச்சாமி தலைமையில் தொழிலாளர்கள் பாடை கட்டி  வைத்து, சுற்றிலும் ஒப்பாரி வைத்து எழுப்பும் போராட்டத்தை  நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி னர்.