“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
சேலம், செப்.18- சேலத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்தி ரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம், திரு.வி.க.ரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் வியாழனன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கிய மனுக்கள் மீது நடவ டிக்கை மேற்கொண்டு 11 பேருக்கு புதிய குடிநீர் இணைப்புக் கான ஆணையும், 30 பேருக்கு குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணையும், 12 பேருக்கு பட்டாக்களும், 61 பேருக்கு புதிய சொத்து வரி விதித்தலுக்கான உத்தரவு ஆணைகளும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி யும் வழங்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் கே.டி.ஆர்.தனசேகரன், உதவி ஆணையர் வேடியப்பன், மாமன்ற உறுப்பினர் திருஞானம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.
சென்னிமலையில் கைத்தறி பூங்கா அமைக்கும் பணி துவக்கம்
ஈரோடு, செப்.18- சென்னிமலையில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணியை, அமைச்சர் ஆர்.காந்தி, மு.பெ.சாமி நாதன் ஆகியோர் வியாழனன்று துவக்கி வைத்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே முருங்கத் தொழுவு கிராமத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் ஆகியோர் வியாழனன்று தொடங்கி வைத்தனர். இதன்பின் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினை இயக்கி வைத்த னர். அப்போது அமைச்சர் காந்தி பேசகையில், கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீன தொழில் நுட்பங் களை பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்ப டுத்தவும் ரூ.20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக் கள் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பின்படி முருங்கத் தொழுவு கிராமத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 65,369 சதுர அடி பரப்பளவு இடத்தில், 8,191 சதுர அடி கட்டிட பரப்பளவில் அமையவுள்ளது. மொத்த மாக 50 தறிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்றுமதி ரகம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட ரகங்களை தயாரிப்பதற்கு உயர்தர பருத்தி ரக துணிகளை கைத்தறி பூங்காவில் உற்பத்தி செய்வதன் மூலம் நெசவாளர்களுக்கு அதிகளவிலான கூலி மற்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர் வேலை வாய்ப்பு வழங்கப்படும், என்றார். இந்நிகழ்ச்சிகளில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வே.அமுதவள்ளி, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, கைத்தறி இணை இயக்கு நர் கணேசன், உதவி இயக்குநர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
ஈரோடு, செப்.18- கொடுமுடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரூரில் புதனன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வியாழ னன்று காலை ஈரோடு மாவட்டம், கொடு முடிக்கு வந்திருந்தார். இதன்பின் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற் கொண்ட அவர், அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணி யாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசி கள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண் டார். இதன்பின் அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா? மருந்து, ஊசிகள் வழங் கப்படுகிறதா? என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தி ருக்க வேண்டும். ஏதேனும் குறைகள் இருந் தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை, செப்.18- மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென்று பெய்த கனமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களான சிறுமுகை காரமடை ஆகிய பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இந்நிலையில் பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதனால் சாலை யில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் தங்களின் வாக னங்களில் முகப்பு விளக்கு களை போட்டு வாகனத்தை இயக்கி வந்தனர். திடீ ரென்று பெய்த கனமழை யின் காரணமாக பொது மக்கள் மற்றும் விவசாயி கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தனியார் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோடு, செப்.18- மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்த மான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெயரில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள் முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந் நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளு டன் செயல்பட்டு வருகிறது. இங்கு கொப் பரை தேங்காய் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, தேவைப்படும்போது தலை மையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனுடைய தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வரு வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்நி றுவனத்திற்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புத னன்று காலை வந்து திடீர் சோதனை மேற் கொண்டனர். தொடர்ந்து, பிற்பகல் 3 மணிய ளவில் மேலும் இரண்டு கார்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இரவு 7 மணிக்கு பிறகும் தொடர்ந்த இச்சோதனை, வியாழனன்று 2 ஆவது நாளாக நடைபெற்றது. ஆவணங் கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்ற விவரம் தெரிவிக்கப்படும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.