தமுஎகச வடக்கு கிளை மாநாடு
திருப்பூர், செப். 22 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16வது திருப்பூர் வடக்கு கிளை மாநாடு ஞாயி றன்று தியாகி பி.ராமசாமி நினைவு மண்டபத்தில் எழுத் தாளர் குழந்தைவேல் அரங் கில் நடைபெற்றது. கிளைத் தலைவர் த.நாகராஜன் தலைமை யில் ஆசிரியர் ஜெயலட்சுமி வரவேற்றார். மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் மாநாட் டைத் தொடக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் மாநாட்டு நோக்க உரை ஆற்றினார். உங்கள் வாழ்க்கையை அழகு படுத்துங்கள் என்கின்ற தலைப்பில் மாயகிருஷ்ணன் எழுதிய நூல் வெளியிடப்பட் டது. ராகுல் முருகசாமி அந்த நூலை அறி முகம் செய்துவைத்தும் பேசினார். நவீன உலகில் சமூக ஊடகம் என்னும் தலைப்பில் ஆசிரியர் எழுத்தாளர் மணிகண்ட பிரபு கருத்துரையாற்றினார். கிளைத் தலைவராக த.காளிதாஸ், துணைத் தலைவர்களாக ஆசிரியர் ஜெய லட்சுமி, தனபால், செயலாளராக பொன் பாலகுமாரன், துணைச் செயலாளர்களாக துரை சம்பத், ராம் ஆனந்த், பொருளாளராக யோகி செந்தில் ஆகியோர் உள்பட 15 பேர் கொண்ட வடக்கு கிளை நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரை ஆற்றினார். முடி வில் சந்தோஷ், நன்றி கூறினார்.