எத்தகைய நெருக்கடியில் இருந்தும் திருப்பூர் மீண்டெழும் ஐகேஎஃப்ஏ அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் நம்பிக்கை
திருப்பூர், செப். 7- எத்தகைய நெருக்கடி வந்தாலும், பீனிக்ஸ் பறவையாய் திருப்பூர் ஜவுளித் தொழில் மீண்டு எழும் என சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி அமைப்பின் (IKFA) தலைவர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்தார். 52 ஆவது இந்திய சர்வதேசப் பின் னலாடை கண்காட்சி திருப்பூரில் வரும் செப்.17ஆம் தேதி முதல் செப்.19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை யொட்டி திருப்பூரில் சனியன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவரும், சர்வதேச பின்ன லாடைக் கண்காட்சி அமைப்பின் (IKFA) தலைவருமான சக்திவேல், செய்தியா ளர்களிடம் பேசுகையில், தற்போதைய நெருக்கடியான சூழலில் வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சி நடை பெறுகிறது. இதன் முக்கிய நோக்கம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத (பசுமை) உற்பத்தி முறைகளை முன் னிலைப்படுத்தி, உலகளாவிய வர்த்த கர்களை ஈர்ப்பதுதான். அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி வரியால், சில ஏற்றுமதி நிறு வனங்கள் பாதிக்கப்பட்டாலும், திருப் பூரின் மொத்த ஏற்றுமதிக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், திருப்பூரின் ஏற்றுமதியில் அமெரிக்கா வின் பங்கு 30% மட்டுமே. மற்ற 70% ஏற்றுமதியானது ஐரோப்பிய ஒன்றியம் (40%) மற்றும் பிற நாடுகளுக்கு (25%) செல்கிறது. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்று மதி ரூ.1.36 லட்சம் கோடியில், திருப்பூ ரின் பங்கு ரூ.15,000 கோடி ஆகும். அமெ ரிக்க சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட, புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். ஐரோப்பிய ஆணை யத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானால், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடு களுக்கும் ஏற்றுமதி செய்வது அதிகரிக் கும். இங்கிலாந்துடன் போடப்பட்ட வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக நடைமுறைக்கு வர உள்ளது. தற் போது ரூ.7,000 முதல் ரூ.8,000 கோடி வரை நடைபெறும் வர்த்தகம், இதன்மூலம் இரட்டிப்பாகும் என நம்பிக்கை தெரி வித்தார். மேலும், ஆஸ்திரேலியா, ஐக் கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனும் வர்த்தக உடன் படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. வங்கதேசம், கம்போடியா, வியட் நாம் போன்ற நாடுகளுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலையில், இந்தியாவுக்கு பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படுவதால், ஆடை உற்பத்தியில் நாம் பின்தங்க மாட்டோம். மேலும், தரம் வாய்ந்த ஆடைகளை உற்பத்தி செய்வ தில் திருப்பூர் சர்வதேச அளவில் சிறந்து விளங்குகிறது என்றார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11% இறக்கு மதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க பருத்தியை வாங்கி, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை களைத் தயாரித்து மீண்டும் அமெரிக் காவுக்கே ஏற்றுமதி செய்யும் திட்டத் தின் மூலம் வரி விலக்கு பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமெ ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 15% வரிச்சலுகை வழங்கும் “மார்க்கெட் ஃபோக்கஸ் ஸ்கீம்” திட்டத்தை அமல் படுத்த நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில், இங்கி லாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வர்த்தகர்களும், முகவர்களும் கலந்துகொள்ள உள்ள னர். மேலும், 60 ஏற்றுமதியாளர்கள் அரங்குகள் அமைக்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15% கூடு தல் ஏற்றுமதி செய்து, ரூ.50,000 கோடி இலக்கை எட்டும் என சக்திவேல் நம்பிக்கை தெரிவித்தார். எத்தகைய நெருக்கடியிலிருந்தும் மீண்டெழும் திறன் கொண்டது திருப்பூரின் பாரம் பரியம் என்றார். பேட்டியின் போது, திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் திருக்குமரன், பெஸ்ட் ராஜ்குமார், ஏஇபிசி இயக்குனர் சுந்தர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.