தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்
கோவை, ஜூலை 10 – உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாகவும், ஊடக உலகின் பேரொளி யாக திகழும் தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு இயக்கம், தமிழ்நாடு முழுவ தும் வியாழனன்று துவங்கியது. இவ் வியக்கத்தில், ஜூலை 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் நடை பெறும், இந்த சந்தா சேர்ப்பு இயக் கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் துவங்கி கிளைச்செயலாளர், கிளை உறுப் பினர்கள் வரையில் சந்தா இயக்கத் தில் ஈடுபட உள்ளனர். இதன் ஒருபகுதியாக, கோவை சின்னியம்பாளையத்தில் நடை பெற்ற நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக் கத்தில் மாவட்டச்செயலாளர் சி.பத் மநாபன் பங்கேற்றார். இதில், சின்னி யம்பாளையம் கிளையின் சார்பில் முதற்கட்டமாக 10 சந்தாக்கள் சேர்க் கப்பட்டு கிளைச்செயலாளர் பால கிருஷ்ணன், கட்சியின் மூத்த உறுப் பினர்கள் கருப்புசாமி, தேவராஜ் உள் ளிட்டோர் சி.பத்மநாபனிடம் வழங்கி னர். இதேபோன்று, சேலம் மாவட்டம், அரியாக்கவுண்டம்பட்டி பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம், மேற்கு மாநகரக்குழு உறுப்பினர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. இதில் சுமைப்பணி தொழி லாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, மூத்த தோழர் பி. சந்திரன், மேற்கு மாநகரச் செயலா ளர் பி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 13 ஆண்டு சந்தாக்கள், 2 அரையாண்டு சந்தாக்கள் சேர்க்கப் பட்டு ஒப்படைக்கப்பட்டது.