தொடர்கதையாகும் மனித - வனவிலங்கு மோதல்
தொண்டாமுத்தூர், ஆலாந்துறை உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் கிரா மப்புறங்களில், உணவு மற்றும் தண் ணீர் தேடி ஊருக்குள் வரும் காட்டு யானைகள், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்த லாக மாறியுள்ளன. இந்த ‘அழைக் கப்படாத விருந்தாளிகள்’ பயிர்களை சேதம் செய்வதுடன், வீடுகளுக்குள் புகுந்து சேதங்களையும் ஏற்படுத்தி வரு கின்றன. இதனால், மக்கள் அச்சத்து டன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. சமீபத்தில் யானை தாக்கிய தில் சிலர் உயிரிழந்ததுடன், பலர் காய மடைந்ததும் இந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. வனத்துறையினரும், மக்களும் தொடர்ந்து இந்த மோதல்களால் பாதிக் கப்பட்டு வருகின்றனர். யானைகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் நுழைந்து பெரும் சேதங்களை ஏற்ப டுத்துவதால், அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். வன உயிரின ஆர்வலர்களின் கூற் றுப்படி, யானைகள் ஊருக்குள் நுழை வதற்கான முக்கிய காரணம், அவற்றின் இயற்கையான வலசைப் பாதைகளில் (elephant corridors) சுதந்திரமாக நடமாட முடியாமல் போனதுதான். உதாரணமாக, கோவையில் மேற்கு புறவழிச்சாலை வனப்பகுதிகளை ஒட்டி அமைக்கப்பட்டு வருவது, யானைகளின் வழக்கமான இயக் கத்தை தடுக்கிறது. இதுவே அவை ஊருக்குள் நுழைய வழி தேடுவதற்கு காரணமாக அமைகிறது என்று நிபு ணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல் லாறு மற்றும் அணைக்கட்டி போன்ற பாரம்பரிய வலசைப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற் றும் அதிகரித்து வரும் வாகனப் போக்கு வரத்து, யானைகளின் சுதந்திரத்தைப் பறித்து, அவற்றை கிராமங்களுக்குள் தள்ளுகிறது. அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தாதது யானைகள் ஊருக்குள் வருவ தைத் தடுப்பதற்காக, அகழிகள் வெட்டு தல், மின்சார வேலி அமைத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனப் புகார் கள் எழுந்துள்ளன. யானைகள் எளிதாக இந்தத் தடுப்பு வேலிகளைத் தாண்டி வருவதால், கிராம மக்கள் பாதுகாப்பு இல்லாமல் உணர்கின்றனர். மேலும், வனத்துறை ஊழியர்க ளுக்குப் புதிய வாகனங்கள் வழங்கப் படாமல், பழைய வாகனங்களே பரா மரிப்பின்றி பயன்படுத்தப்படுவது அவர்களின் பணியை மேலும் கடின மாக்குகிறது. அதிகாரிகளும் மக்களின் புகார்களுக்கு உரிய கவனம் செலுத்த வில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சில சமயங்களில், யானைகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதிலும் தவறுகள் நிகழ்வதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மனித-வனவிலங்கு மோத லைத் தணிக்க, அரசு மற்றும் வனத் துறை இணைந்து செயல்பட வேண்டி யது அவசியம். யானைகளின் பாரம் பரிய வலசைப் பாதைகள் பாதுகாக்கப் பட வேண்டும். சாலைகள் அமைக்கும் போதும், பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போதும் வனவிலங்கு களின் தேவைகள் கருத்தில் கொள் ளப்பட வேண்டும். காடுகளை அழிக்கும் அத்துமீறல் களைக் கடுமையான நடவடிக்கைக ளால் தடுக்க வேண்டும். மனிதர்க ளுக்கும் யானைகளுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கினால் மட் டுமே, இந்தத் தொடர் மோதல்களை யும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு களையும் குறைக்க முடியும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டால், யானைகளின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட்டு, அவை ஊருக்குள் நுழையும் அச்சுறுத்தல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. -கார்த்திக்