tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பன்றிக்குட்டியை தூக்கிச் சென்ற சிறுத்தை

கோவை, ஜூலை 20- தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் நின்று  கொண்டிருந்த பன்றிக்குட்டியை சிறுத்தை ஒன்று தூக்கிச்  சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டத்தில் மருதமலை, மதுக்கரை, வாளை யாறு, தடாகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து வெளி யேறும் சிறுத்தைகள், வன எல்லையை ஒட்டியுள்ள பகுதி களுக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வரு கின்றன. இந்நிலையில், தொண்டாமுத்தூரை அடுத்த தாளி யூர் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று,  அங்கு சாலையில் நின்றிருந்த பன்றிக்குட்டியை பிடித்துச் சென்றது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஞாயி றன்று வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கோவை வனத்துறையி னர் சிறுத்தை கால் தடத்தை உறுதிபடுத்தினர். மேலும், இரண்டு இடங்களில் கேமராக்களை பொருத்தி கண் காணித்து வருகின்றனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு

சேலம், ஜூலை 20- மேட்டூர் அணை உபரிநீரில் அடித்துச் செல்லப்பட்ட முதிய வர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம்  நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை ஞாயிறன்று எட்டியது. இதையடுத்து காலை 8  மணிக்கு உபரிநீரை நீர்வளத்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இந்நிலையில், பெரியார் நகர் கால்வாயில் நின்று  கொண்டிருந்த முதியவர் சடையன் (60) நீரில் அடித்துச்  செல்லப்பட்டார். இதனைக்கண்ட அருகில் இருந்த மீன வர்கள் முதியவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீ சார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு மிரட்டல்

கோவை, ஜூலை 20- கோவை விமான நிலையத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழி யரை மிரட்டிய கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு  செய்து, விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம், பீளமேடு அருகே உள்ள சௌரிபாளை யத்தைச் சேர்ந்தவர் ராஜ் கிஷோர். ஓய்வு பெற்ற அரசு ஊழிய ரான இவர், கோவை விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குச்  செல்ல கேஸ் இணைப்பு இல்லாத வாடகை காரை முன்பதிவு  செய்தார். இதையடுத்து அவர் அங்கு வந்த வாடகை காரில்  தனது பொருட்களை வைக்கும்போது, அது கேஸ் இணைப்பு  உள்ள கார் என்பது தெரிய வந்தது. உடனே அவர் கார் ஓட்டு நரான ரத்தினபுரியைச் சேர்ந்த சண்முக வேலாயுதத்திடம், தனக்கு கார் வேண்டாம், என்று கூறியதாக தெரிகிறது. இத னால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சண்முக வேலாயுதம், ராஜ் கிஷோரை தகாத  வார்த்தைகளால், பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து புகாரின்  பேரில் சண்முக வேலாயுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி

கோவை, ஜூலை 20- மதுக்கரை அருகே மின்சாரம் பாய்ந்து 11 ஆம் வகுப்பு  மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள அறி வொளி நகர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரின் மகன்  நந்தகுமார் (16). இவர் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு  படித்து வந்தார். இந்நிலையில், சனியன்று அவரது பெற்றோர்  மற்றும் தங்கை ஆகியோர் கடைக்கு செல்வதற்காக புறப்பட்ட னர். அப்போது, தங்கையின் ஸ்வெட்டரை நந்தகுமார் பெற் றோரிடம் வீசியபோது, தவறுதலாக அவ்வழியாக செல்லும்  மின் கம்பியின் மீது விழுந்தது. அதை எடுக்க முடியாத தால் பெற்றோர் கடைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், மின்கம்பி மீது விழுந்த ஸ்வெட்டரை வீடு துடைக்கும் இரும்பு கம்பு மூலம் நந்தகுமார் எடுக்க முயன்றுள்ளார். அப் போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.  இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிரிழந்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல ளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மாணவரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.