உயிர்த்தியாகத்தின் சகாப்தம்: ‘சகாவு புஷ்பன்’
கோகுல்ராஜ்,
கேரள அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் தங்கள் பெயர் களைப் பொறித்துச் சென்ற தியாகிகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிப்பவர் சகாவு புஷ்பன். கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் இவர், தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கை யிலேயே கழித்திருந்தாலும், அவரின் மன தில் புரட்சிச் சிந்தனையும், போராட்ட உணர்வும், கம்யூனிசத்தின் மீதான பற்றும், சமூக நீதி குறித்த நம்பிக்கையும் என்றென் றும் தழைத்தோங்கிக் கொண்டே இருந் தது. போராட்டக் களத்தில் நிற்கும் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு இவர் ஓர் ஒளிக்குமிழாக இருந்து உற்சாக மூட்டி யவர். இவர் பெயரைச் சொன்னாலே கண்ணீ ரும், இதயத்தில் பெருமையும் பொங்கும் ஓர் உணர்வை கேரள மக்களுக்கு ஏற்ப டுத்தியவர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பூத்தக்குடி கிராமத்தில் பிறந்த புஷ்பன், சிறுவயதிலிருந்தே சமூகத்தின் மீதும், அரசியலின் மீதும் அக்கறை கொண்டவராக வளர்ந்தார். ‘எல்லோருக்கும் பாகுபாடற்ற கல்வி, எல்லோருக்கும் வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவை சோசலிச நாடாக மாற்றப் போராடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (DYFI) இணைந்து கேரள மக்களின் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1995 நவம்பர் 25ஆம் தேதி கேரள அரசியல் வரலாற்றின் கருப்பு நாளாக நினைவு கூறப்படுகிறது. அன்றைய தினம் கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அர சாங்கம், கண்ணூர் மாவட்டம் கூத்துப்பரம்பா வில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைத்து கல்வியைத் தனியார்மயமாக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கமும் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கமும் (SFI) இணைந்து எழுச்சி மிக்கப் போராட்டத்தை நடத்தினர். கேரள மண்ணையே உலுக்கிய இந்தப் போராட்டத்தை கலைக்க, காவல்துறை தடி யடி நடத்தியது. போராட்டக்காரர்கள் எந்த வன்முறையும் இன்றி கைகோர்த்து உறுதி யுடன் படுத்துக் கொண்டார்கள். ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் அரசு போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், ராஜீவன், ரோஷன், மது, ஷிபு லால், பாபு ஆகிய ஐந்து தோழர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். துப்பாக்கிச் குண்டு தோழர் புஷ்பனின் பின் கழுத்தைத் துளைத்தது. அந்தக் குண்டை எடுத்தால் உயிர் போய்விடும் என்ற நிலையில், புஷ்பன் மட்டும் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிக் கிறார். ஆனால், முதுகுத் தண்டுவடம் பாதிக் கப்பட்டதால், அவரால் இயங்க முடியாமல் படுக்கை வசதியாக இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். ‘புஷ்பன அறியாமோ எங்கட புஷ்பன அறியாமோ’ என்ற புகழ்பெற்ற நெகிழ்ச்சி யான, துயரம் கலந்த பாடல் இன்றும் கேர ளத்தில் பிரபலமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுத்தப் படுக்கையாக இருந்தாலும், தோழர் புஷ்பன் தன்னை வந்து காணும் தோழர்களி டம் புன்னகை ததும்பும் முகத்துடன், சோச லிச சிந்தனையுடன் இயக்கப் பணி எப்படி இருக்கிறது என்பதை அக்கறையுடன் விசா ரிக்கும் தோழனாக வாழ்ந்தார். 30 ஆண்டு கள் - 10957 நாட்கள் - தான் வாழ்கையை இழந்ததை, வாழ்வின் பல்வேறு இன்பங்க ளைத் தொலைத்துவிட்டதை நினைத்து அவர் ஏங்கவில்லை. மாறாக, தன் தொடர் ஊக் கத்தினால், போராட்டங்களின் மீதான, சோச லிசத்தின் மீதான நம்பிக்கையை இளைய தலைமுறையிடம் ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டுச் சென்றார். அவரின் தியாகத்தைப் போற்றும் விதத்திலும், லட்சோப லட்சம் இளைஞர்களை அணிதிரட்டி சோசலிச சமத்துவ சமு தாயத்தை உருவாக்குவதற்கான மாநாடாக வும், “சமத்துவ தமிழ்நாடும் சமர் புரியும் வர லாற்றை படைப்பதற்கான மாநாடாகவும்” நடைபெற உள்ள இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 18வது மாநில மாநாடு வெற்றி பெறட்டும்!
