tamilnadu

தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்!

தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே  தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்!

சென்னை, செப். 10 - எய்ம்ஸ் செவிலியர் முதல்நிலைத் தேர்வு  எழுதும் தமிழக இளைஞர்களுக்கு தமிழ் நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலா ளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: 3500 செவிலியர் பணியிடங்களை நிரப்பு வதற்கான அகில இந்திய மருத்துவ நிறு வனம் (AIIMS) மூலம் நடத்தப்படும் NORCET  – 9 (Nursing Officer Recruitment Common Eligibility Test) தேர்வு, செப்டம்பர்  14 அன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மாண வர்கள் பெருமளவில் விண்ணப்பித்துள்ள னர். ஆனால், இந்தத் தேர்வுக்கான மையங் கள் தமிழக மாணவர்களுக்கு பெரும்பாலும் திருப்பதி, ஹைதராபாத் போன்ற வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இத னால் மாணவர்கள் ஆயிரக்கணக்கான கிலோ  மீட்டர்கள் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொருளாதார சிக்கல்கள், பயண சிரமங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்ச னைகள் மாணவர்களைப் பாதிக்கின்றன. தமிழகத்தில் போதுமான தேர்வு மையங் கள் உள்ள போதிலும், தொடர்ந்து ஒன்றிய  அரசின் பல தேர்வுகளுக்கு வெளிமாநிலங் களில் மையங்கள் ஒதுக்கப்படுவது தமிழ் நாட்டிலிருந்து, தேர்வு எழுதுபவர்களை திட்டமிட்டு வஞ்சிக்கும் செயலாகும்.  ஆகவே, எய்ம்ஸ் (AIIMS) நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உடன டியாக தமிழகத்தில் கூடுதல் தேர்வு மை யங்களை ஒதுக்க வேண்டும்;  மாணவர் களின் வசதிக்காக தேர்வு மைய ஒதுக் கீட்டை, விண்ணப்ப முகவரியை அடிப்ப டையாகக் கொண்டு நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும்; வெளிமாநிலங்கள் மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்று வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.